Monday, August 26, 2013

5.பூநாகச் செம்பு ,

பூநாகம் 175 கிராம்,பச்சை கற்பூரம் 9 கிராம்,கோவை இலைச்சாற்றில் அரைத்து வில்லை தட்டி காயவைத்து 20 எருவில் புடமிட்டு எடுத்து,மறுபடியும் வெங்காரம் பாதி சேர்த்து கோவை சாற்றால் அரைத்து 10 வரட்டியில் புடமிட்டு எடுத்து அதை காடியில் கரைத்து 4 நாள் கழித்து தெளிவிருத்து வண்டலை காயவைத்து சுரண்டி எடுத்து மூசையிலிட்டு உருக்க பூநாகா செம்பு ஆகும்.மதியில் வேதை.

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

Wednesday, August 21, 2013

4.ரசக்கிண்ணி (துருசினால்).

துருசு 40 விராகனெடை,
ரசம்    40 விராகனெடை,

துருசை பொடி செய்து அய சட்டியில் பாதி போட்டு அந்த பொடியில் பள்ளம் செய்து ரசம் விட்டு மேல்பாதி பொடியை போட்டு எலுமிச்சம் பழசாறு விட்டு இருகின பின்,10 பழத்தை அறுத்து பிழிந்து விட்டு அப்படியே எடுத்துவைத்து விட்டு,மறுநாள் காலையில் எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சி,சாறு வற்றியபின் எடுத்து தண்ணீர் விட்டு கழுவி ரசத்தை எடுத்து உருட்டிக் கிண்ணி செய்து தண்ணீரில் வைத்து இறுகிய பின் எடுக்கவும்.

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

Monday, August 19, 2013

3.தாமிர வேதை

அருகம் வேரும்,கீரிப்பூண்டும் குப்பைமேனி சாறு விட்டரைத்துக் குகை செய்து அதற்குள் செம்பு வைத்து சீலை செய்து கெஜ புடமிட சுத்தியாகும்.அதை நாலுக்கு ஒன்று மதி கொடுக்க ஆறு வயது.

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.